உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2: கோவை மாவட்டம் 96.66 சதவீத தேர்ச்சி

கோவை: பிளஸ் 2 தேர்வில், கோவை மாவட்டம் 96.66 சதவீதம் தேர்ச்சி விகிதம் பெற்றுள்ளது.கோவை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை, 365 பள்ளிகளைச் சேர்ந்த 35,448 பேர், 130 மையங்களில் எழுதினர். தேர்வு எழுதியோரில் மாணவர்கள் 16,235; மாணவிகள் 19,213 பேர்.கடந்த ஆண்டு 35,037 பேர் தேர்வெழுதினர். இந்த ஆண்டில் எண்ணிக்கை சற்று அதிகரித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில், 1,184 பேர் தேர்ச்சி பெறவில்லை.வழக்கம் போல் இந்த ஆண்டும் மாணவர்களை விட, மாணவிகளே அதிக தேர்ச்சி விகிதத்தை பெற்றுள்ளனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 95.66. மாணவிகள் 97.50 சதவீதம். மாவட்டத்தின் மொத்த தேர்ச்சி சதவீதம் 96.66 சதவீதமாகும்.2022ல் 96.91, 2023ல் 97.57, 2024ல் 96.97, 2025ல் 97.48 என தேர்ச்சி சதவீதம் பதிவாகியிருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடும் போது 0.82 சதவீதம் தேர்ச்சி விகிதம் குறைந்து, 4வது இடத்திலிருந்து 13வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.கோவை கல்வி மாவட்டத்தில் மட்டும் 27,871 பேர் தேர்வெழுதிய நிலையில், 26,9770 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.79 சதவீதம். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 7,577 பேர் தேர்வெழுதியதில், 7,287 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 96.17 சதவீதம்.கடந்தாண்டு 23 அரசுப் பள்ளிகள் உட்பட 180 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி விகிதத்தை பெற்றிருந்தன. இந்தாண்டு மாவட்டத்தில் 13 அரசுப்பள்ளிகள், ஏழு அரசு உதவி பெறும் பள்ளிகள் என 138 மெட்ரிக், சுயநிதி பள்ளிகள் என 158 பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி சதவிகிதத்தை பெற்றுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்