உள்ளூர் செய்திகள்

பிளஸ் 2 : 25ம் தேதி மதிப்பெண் பட்டியல்

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாகியுள்ள நிலையில் வருகிற 25ம் தேதி அனைத்துப் பள்ளிகளிலும் மதிப்பெண் பட்டியல் விநியோகிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மறு கூட்டல் மற்றும் விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்க விரும்புவோர் வருகிற 11ம் தேதி முதல் 16ம் தேதி வரை அதைச் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் கூறுகையில் : விடைத்தாள் நகல் கோருவோர், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் 11ம் தேதி முதல் 16ம் தேதிக்குள் அதற்காக விண்ணப்பிக்கலாம். அனைத்து முதன்மை கல்வி அதிகாரி அலுவலகங்கள், இணை இயக்குனர் (கல்வி) புதுச்சேரி, அனைத்து மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்கள், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் பெறலாம். விடைத்தாள் நகல் பெறுவதற்கு, மொழிப்பாடம் மற்றும் ஆங்கிலத் தாள் ஒவ்வொன்றுக்கும், தலா, 550 ரூபாயும், மற்ற பாடங்களுக்கு, 275 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்