ஜுன் 27ம் தேதி தொடங்கும் அகடமிக் கவுன்சிலிங் - அண்ணா பல்கலையின் வழிகாட்டுதல்கள்
இதுகுறித்து அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்படுவதாவது: தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள், தங்களுடைய ரேங்க் வரிசையின்படி, குறிப்பிட்ட நாளில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். அவர்கள், அவர்கள், அண்ணா பல்கலையிடமிருந்து பெற்ற தனிப்பட்ட தகவல் தொடர்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. அதேசமயம், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்து, அதனடிப்படையில் கூடுதல் மதிப்பெண் பெற்றவர்கள், தங்களுடைய புதிய மதிப்பெண்கள் அடிப்படையில், குறிப்பிட்ட நாள் மற்றும் நேரத்தில், கவுன்சிலிங்கில் கலந்து கொள்ளலாம். சென்னை அண்ணா பல்கலையின் வளாகத்தில் அமைந்த, நுழைவுத்தேர்வு மற்றும் சேர்க்கை மையத்தில், அகடமிக் பொதுப்பிரிவு கவுன்சிலிங் நடைபெறுகிறது. கவுன்சிலிங்கில் கலந்துகொள்வோர், ஆரம்பகட்ட வைப்புத்தொகையாக, ரூ.5000 செலுத்த வேண்டும். SC/ST பிரிவினர் ரூ.1,000 செலுத்தினால் போதும். கவுன்சிலிங் தொடங்குவதற்கு 2 மணி நேரங்களுக்கு முன்னதாகவே, அண்ணா பல்கலைக்கு வந்துவிடுவது நல்லது. இதனால், பல தேவையற்ற சிக்கல்கள் ஏற்படுவதை தவிர்க்கலாம். காலியிடங்கள் பற்றிய விபரங்களை அறிய, கவுன்சிலிங்கில் மையத்தில் இருக்கும் Display திரையில் பார்க்கலாம் அல்லது அண்ணா பல்கலையின் அதிகாரப்பூர்வ www.annauniv.edu/tnea2014 இணையதளம் செல்லவும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.