உள்ளூர் செய்திகள்

பொறியியல் கவுன்சிலிங்:4 நகரங்களில் நடத்த திட்டம்

இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கை, சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில் நடத்த, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள், கடந்த 16ம் தேதி முதல் வழங்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை, ஒரு லட்சத்து 52 ஆயிரத்து 524 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டுள்ளன. வரும் 31ம் தேதி வரை, விண்ணப்பங்களை பெறலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஜூன் 3ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். கடந்த அ.தி.மு.க., ஆட்சியில், சென்னை உள்ளிட்ட நான்கு நகரங்களில், பொறியியல் சேர்க்கை கவுன்சிலிங் நடந்தது. தி.மு.க., ஆட்சியில், ஒரே இடமாக சென்னை அண்ணா பல்கலையில் மட்டும் நடந்தது. இந்நிலையில், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கவுன்சிலிங்கை, மீண்டும் நான்கு மையங்களில் நடத்துவது குறித்து, தமிழக அரசு ஆலோசித்து வருகிறது. சென்னை, மதுரை, திருச்சி, கோவை ஆகிய நான்கு நகரங்களில் கவுன்சிலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்