10ம் வகுப்பு தேர்வு முடிவு: இன்று வெளியீடு
மாணவர்கள் பள்ளிகளிலும், இணையதளங்களிலும் தங்களது தேர்வு முடிவுகளை பார்த்து வருகின்றனர். இன்று காலை, 10 மணிக்கு, தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியலை அதிகாரிகள் வெளியிட்டனர். இதே நேரத்தில், மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளிலும், மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு முடிவுகளை தினமலர் இணையதளத்திலும் காணலாம்.