10 வயது மாணவர் கை விரல்களில் 50 கார்களை ஏற்றி சாதனை முயற்சி
தஞ்சாவூர்: உலக சாதனை முயற்சிக்காக, 5ம் வகுப்பு மாணவர், இரு கை விரல்களை சாலையில் வைத்து, தொடர்ச்சியாக, 50 கார்களை ஏற்ற செய்தார்.தஞ்சாவூர் மாவட்டம், உம்பளாக்கொல்லை கிராமத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் - வேம்பு தம்பதி மகன் நாராயணமூர்த்தி, 10. அரசுப் பள்ளியில், 5ம் வகுப்பு படிக்கிறார். தவிர, &'கிங் கோ ஜூ ரியோ&' என்ற கராத்தே பயிற்சி பயிற்சி பள்ளியில், கராத்தே பயின்று வருகிறார்.இவர், கொரோனா விழிப்புணர்வுக்காகவும், உலக சாதனை முயற்சியாகவும், தன் இரு கை விரல்களை சாலையில் வைத்து, தொடர்ச்சியாக, 50 கார்களின் டயர்களை கைகளின் மேல் ஏற்றச் செய்து, சாதனை நிகழ்த்தினார். துவரங்குறிச்சியில் நடந்த சாதனை நிகழ்வை, பட்டுக்கோட்டை, டி.எஸ்.பி, புகழேந்தி கணேஷ் துவக்கி வைத்தார்.அரசியல் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், கிராம மக்கள், கராத்தே மாணவ - மாணவியர் என, பலர் சாலையின் இருபுறமும் அணிவகுத்து நின்று, மாணவரின் முயற்சியை ஊக்கப்படுத்தும் வகையில், கை தட்டி உற்சாகப்படுத்தினர்.