உள்ளூர் செய்திகள்

10 ஆயிரம் பேருக்கு புதிய வேலைவாய்ப்பு

கடந்த 10 ஆண்டு காலத்தின் இறுதி ஆண்டுகளில் தொடங்கிய பொருளாதார மந்தநிலையானது, இன்றுவரை வெவ்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. மேற்கு நாடுகள், மாறி மாறி இப்பிரச்சினையில் சிக்கித் தவிக்கின்றன. இதனால், இந்தியாவைச் சேர்ந்த பலரும் பாதிக்கப்பட்டனர், பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஐடி படித்துவிட்டு, நமக்கு சரியான வேலை கிடைக்குமா? என்று உள்ளூர பயந்துகொண்டே பல இளைஞர்கள் இன்று உள்ளனர். எத்தனையோ நிறுவனங்கள் ஆள்குறைப்பு செய்யும் நிலையில், HCL போன்ற நிறுவனங்கள் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கின்றன. பொருளாதார மந்த நிலையிலும் சிறப்பாக செயல்பட்ட நிறுவனம் இந்த HCL என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிறுவனம், தற்போதைய நிலையில், புதிதாக 10,000 நபர்களை பணியில் அமர்த்தி வருகிறது. இந்த செயலை அதிக விளம்பரமின்றி அந்த நிறுவனம் செய்துவருகிறது. இதில் பல, வெளிநாட்டு பணிகள் என்பதும் குறிப்பிடத்தக்கது. பொருளாதார மந்தநிலையை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள HCL செய்யும் ஒரு உத்தி என்றும் சிலர் கூறுகின்றனர். ஏனெனில், இந்த சமயத்தில்தான் திறமையான பணியாளர்கள் குறைந்த சம்பளத்திற்கு கிடைப்பார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது. எப்படியாயினும், புதிதாக 10,000 பேர் நல்ல பணி வாய்ப்பினை பெறவுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்