1,300 பேரைக் குறைக்க நார்டெல் நிறுவனம் முடிவு
உலக அளவில் ஏற்பட்டு வரும் பொருளாதார தேக்க நிலை காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொ ண்டு வருகின்றன. இந்நிலையில், வட அமெரிக்காவில் டெலிபோன் சாதனங்கள் தயாரிக்கும் மிகப் பெரிய நிறுவனமான நார்டெல் நெட் ஒர்க்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் 1,300 பேரைக் குறைக்க முடிவு செய்துள்ளது. இந்த நிறுவனத்தில் 32 ஆயிரம் பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் ஆயிரம் ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதுதவிர விப்ரோ, டி.சி.எஸ்., இன்போசிஸ், சஸ்கென் ஆகிய நிறுவனங்களில் இந்த நிறுவனத்திற்காக 2,500 பேர் பணிபுரிகின்றனர். இந்தியாவில் எத்தனை பேர் பணிக்குறைப்பினால் நீக்கப்படுவார்கள் என்பது தெரியவில்லை.