பிளஸ்2 தொழிற்கல்வி தனித்தேர்வர்களுக்கு இறுதி வாய்ப்பு
இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் த. வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 2011-12ம் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி இரண்டாம் ஆண்டு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு தொழிற்கல்வி பாடப்பிரிவில் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக புதிய பாடத்திட்டம் அறிமுகமாகும் போது பழைய பாடத்திட்டத்தின் கீழ் தேர்வு எழுதி, தேர்ச்சி பெறாத பாடங்களை பழைய திட்டத்தில் தேர்வு எழுத தனித்தேர்வர்களுக்கு இரண்டு பருவங்கள் வாய்ப்பு அளிக்கப்படும். அந்த வகையில், பழைய பாடத்திட்டத்தை படித்து கடந்த மார்ச் மாதம் தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்களும் அதற்கு முன்பு தோல்வி அடைந்தவர்களுக்கும் கடந்த செப்டம்பர் மாதத்தில் ஒரு வாய்ப்பு அளிக்கப்பட்டது. அடுத்தது வரும் 2012ம் ஆண்டு மார்ச் மாதம் இறுதி வாய்ப்பு அளிக்கப்படும். எனவே பழைய பாடத்திட்டத்தைப் படித்து இறுதி வாய்ப்பான மார்ச் மாத தேர்வில் தனித் தேர்வர்கள் தேர்ச்சி பெறுவது சிறந்தது என்று கூறப்பட்டுள்ளது.