உள்ளூர் செய்திகள்

3,093 பேருக்கு தேசிய கல்வி உதவித்தொகை

திருப்பூர்: தமிழகத்தை சேர்ந்த 3,093 மாணவ, மாணவியருக்கு தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:இளம் சாதனையாளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டத்தின் கீழ் கல்வி உதவித் தொகை பெற தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், சீர்மரபினர் ஆகிய பிரிவுகளை சேர்ந்த நாடு முழுவதும் 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.2023 - 24ம் ஆண்டுக்கு http://scholarships.gov.in/public/FAQ/topclass school list 2211 compressed.pdf என்ற இணைய முகவரியில் வெளியிட்டுள்ள பள்ளிகளில் பயிலும் தமிழகத்தை சேர்ந்த, 3,093 மாணவர்களுக்கு இக்கல்வி உதவித்தொகை வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோரது உச்ச வருமான வரம்பு 2.5 லட்சம் ரூபாய். விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 31ம் தேதி; கல்வி நிறுவனங்கள் விண்ணப்பத்தினை சரிபார்க்க கடைசி நாள், ஜன., 15ம் தேதி.திட்டத்தின் கீழ் கடந்த நிதியாண்டில் பயனடைந்த மாணவ, மாணவியர் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் சென்று கடந்த ஆண்டில் இத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்ப எண் மற்றும் கடவு சொல் பதிவு செய்து, இந்தாண்டு விண்ணப்பத்தை புதுப்பித்து கொள்ளலாம்.நடப்பாண்டில் புதிதாக விண்ணப்பிக்க விரும்பும், ஒன்பது மற்றும் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் முறையே, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையிலேயே பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு உதவித்தொகை வழங்கப்படும்.அறுபது சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக, எட்டு மற்றும் பத்தாம் வகுப்புகளில் மதிப்பெண்கள் பெற்ற பட்டியலிடப்பட்ட பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியர்கள் தேசிய கல்வி உதவித்தொகை தளத்தில் சென்று விபரங்களை பதிவு செய்ய வேண்டும். பெறப்படும் விண்ணப்ப எண், கடவுசொல் பதிவுகளை, fresh application என்ற இணைப்பின் கீழ் பதிவு செய்து, உரிய ஆவணங்களை பதிவேற்றம் செய்து, இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம்.கூடுதல் விபரங்கள் அறிந்திட national scholarship portal மற்றும் மத்திய அரசின் சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணைய தளத்தை அணுகலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்