உள்ளூர் செய்திகள்

340 ஏக்கரில் தாவரவியல் பூங்கா

சென்னை: செங்கல்பட்டு மாவட்டத்தில், 340 ஏக்கர் பரப்பளவில், தாவரவியல் பூங்கா அமைக்க, தமிழகம் மற்றும் பிரிட்டன் அரசுகளுக்கு இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.லண்டனில் உள்ள, கியூ கார்டன்ஸ் நிறுவனத்தின், தொழில்நுட்ப பங்களிப்புடன், செங்கல்பட்டு மாவட்டம், கடம்பூர் கிராமத்தில், 340 ஏக்கர் பரப்பளவில், தாவரவியல் பூங்கா அமைக்க, தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தின் பூர்வீக தாவரங்கள், அரிய வகை தாவரங்கள் போன்றவற்றை பாதுகாப்பதே, இப்பூங்கா அமைப்பதற்கான நோக்கம். இது தொடர்பாக, நேற்று தமிழக வனத் துறை அமைச்சர் மதிவேந்தன், பிரிட்டன் அரசின் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் தெரஸ் கோபே முன்னிலையில், தமிழக சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு, கியூ கார்டன்ஸ் இயக்குனர் ரிச்சர்ட் டெவெரெல் ஆகியோர் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.பின், பிரிட்டன் அரசின் பங்களிப்புடன், காலநிலை மாற்றங்களுக்கான, துரிதப்படுத்தப்பட்ட அலையாத்தி காடுகள் திட்டத்தை, பிரிட்டன் அமைச்சர் தெரஸ் கோபே துவக்கி வைத்தார். தொழிற்சாலைகளில், கார்பன் குறைப்புக்கான முன்முயற்சி திட்டத்தை, பிரிட்டன் அமைச்சர் கிரஹாம் ஸ்டூவர்ட், தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.அமைச்சர்கள் மெய்யநாதன், மதிவேந்தன் ஆகியோர் அளித்த பேட்டி:இந்தியாவில் முதன்முறையாக, குறைந்த அளவு கார்பன் வெளியிடும் தொழிற்சாலைகளுக்கு, &'பசுமை தொழிற்சாலை&' என சான்று வழங்க, ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. கார்பன் அளவை குறைக்க ஆலோசனைகள் மற்றும் உதவிகள் வழங்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்