உள்ளூர் செய்திகள்

373 அரசு துவக்க பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி ஆரம்பம்

பெங்களூரு: கர்நாடகாவில் புதிதாக 373 அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி ஆரம்பிக்கும்படி, பள்ளிக்கல்வித் துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்துள்ளது.கர்நாடகாவில் அரசு சார்பில், 2,000 ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகள் திறக்கப்படும் என்று, 2024 - 25 நிதி ஆண்டு பட்ஜெட்டில், முதல்வர் சித்தராமையா அறிவித்தார். இதன்படி, முதற்கட்டமாக, 1,419 அரசு துவக்கப் பள்ளிகளில், ஏற்கனவே இருமொழி கல்விக்கொள்கை கொண்டு வரப்பட்டது. அந்த பள்ளிகளில், கன்னடவழிக் கல்வியுடன், ஆங்கிலவழிக் கல்வியும் உள்ளன.தற்போது, புதிதாக 373 அரசு துவக்கப் பள்ளிகளில், ஆங்கிலவழிக் கல்வி ஆரம்பிக்கும்படி, பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு பிறப்பித்தது. ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை ஆங்கிலவழிக் கல்வி இருக்கும். கன்னடம் ஒரு பாடம் கட்டாயமாகும். தற்போது மும்மொழிக் கல்விக்கொள்கை இருப்பது குறிப்பிடத்தக்கது.அரசு உத்தரவின்படி, ஏற்கனவே இருக்கும் உட்கட்டமைப்பு வசதிகளுடன், உடனடியாக வகுப்புகளை துவங்கும்படி கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடகாவில், மே மாத இறுதியில் 2024 - 25ம் கல்வி ஆண்டு துவங்கியது. தற்போது ஆங்கிலவழிக் கல்வி பள்ளிகள் துவங்குவதால், மாணவர்கள் எப்படி படிப்பர் என்று பார்க்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்