உள்ளூர் செய்திகள்

டிஜிட்டல் கரையான்களை சுத்தம் செய்ய வேண்டிய நேரமிது

சென்னை: “டிஜிட்டல் கரையான்களை சுத்தம் செய்ய வேண்டிய நேரம் இது,” என, பள்ளிக்கல்வி துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்தார்.சென்னையில் அவர் அளித்த பேட்டி:கோவை ஈ.வெ.ரா., நூலக புத்தக கொள்முதலில், அரசியல்வாதிகளோ, அதிகாரிகளோ யார் தவறு செய்தாலும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். அதனால் தான், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அளித்துள்ளோம். இந்த விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது.தமிழகம் முழுதும் உள்ள நுாலகங்களில் 'சிண்டிகேட்' போட்டு அமர்ந்துள்ள, இதுபோன்ற 'டிஜிட்டல்' கரையான்களை நாம் சுத்தம் செய்ய வேண்டிய நேரம் வந்துள்ளது. அந்த கரையான்கள் அரசியல்வாதியாக இருந்தாலும், அதிகாரியாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்துவோம்.முதல்வர் விஜய் ஆய்வு செய்யாமல் எப்படி நுாலகத்தை திறந்தார் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். திறக்க தயார் நிலையில் இருந்த நுாலகத்தை, பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்களை சரிபார்த்து திறந்தோம். ஆனால், கொள்முதல் செய்ததையோ, கருவூலத்தில் இருந்து மாவட்ட நிர்வாகத்துக்கு சென்ற ஆணையையோ எப்படி மாற்ற முடியும்?இதுவரை இருந்த அரசுகளை விட, நுால் பதிப்பாளர்களுக்கு அதிக சலுகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தி.மு.க., சார்பில் லஞ்ச ஒழிப்பு துறையில் புகார் அளித்த செயல் நகைச்சுவையாக உள்ளது. ஒரு பெண் எழுத்தாளர் பெயரில் நுாறு நுால்கள் எழுதப்பட்டுள்ளன. கள்ள நோட்டு அடிப்பது போல், ஏ.ஐ., எனும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி, பல நுால்களை வெளியிட்டுள்ளனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்