400 உயர்நிலைப் பள்ளிகளில் கம்ப்யூட்டர் வசதி
மத்திய அரசு இதற்கான நிதியை வழங்க சம்மதித்துள்ளது என்று தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் எம். குற்றாலிங்கம் தெரிவித்தார். கல்வியில் தொழில்நுட்பம் குறித்த விருது வழங்கும் விழாவில் பேசிய அவர், அடுத்த மூன்று ஆண்டுகளில் 6,600 நடுநிலைப் பள்ளிகளுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றார் அவர். கல்வியில் தொழில்நுட்பத்தைச் சிறப்பாகச் செயல்படுத்தியதற்காக மாநில அளவில் சென்னை, கடலூர், கன்னியாகுமரி, கிருஷ்ணகிரி, மதுரை, திருவாரூர், திருச்சி, விருதுநகர் ஆகிய ஊர்களைச் சேர்ந்த 10 ஆசிரியர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 51 ஆசிரியர்களுக்கு மாவட்ட அளவில் பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்தப் போட்டியில் 400க்கு மேற்பட்டோர் பங்கேற்றனர்.