உள்ளூர் செய்திகள்

431 மதிப்பெண் பெற்ற மாணவர் படிக்க வழியில்லை

பத்தாம் வகுப்பில், 431 மதிப்பெண் எடுத்தும், தொடர்ந்து படிக்க வசதியில்லாமல், வீட்டின் வறுமை காரணமாக, கூலி வேலைக்கு செல்ல வேண்டிய அவல நிலையில், மாணவர் தவித்து வருகிறார். ராமநாதபுரம் ஆண்டித்தேவன் வலசையைச் சேர்ந்த முருகேசன் மகன் சண்முகபாண்டி. தந்தை இறந்துவிட்டதால், பாட்டி வீட்டிலிருந்து மேதலோடை நாடார் மகாஜன சங்க பள்ளியில் படித்து வந்தார். படிப்பில் ஆர்வம் கொண்ட இவர், 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 431 மதிப்பெண் பெற்றார். ஆனால், வீட்டுக் கஷ்டத்தால் தொடர்ந்து படிக்க முடியாத சூழ்நிலையில், கூலி வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயநிலை ஏற்பட்டுள்ளது. மாணவர் சண்முகபாண்டி கூறும்போது, "தந்தை இறந்துவிட்டதால் வீட்டில் போதிய வருமானமின்றி கஷ்டப்படுகிறோம். படிப்பிற்கு செலவு செய்ய முடியாத நிலையில், இரண்டு தங்கைகளை படிக்க வைக்க வேண்டிய நிலையில் வேறு வழியின்றி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வேலைக்கு செல்லும் நிலையில் உள்ளேன்" என்றார். இவருக்கு உதவி செய்ய விரும்புவோர், 90956 85687 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்