உள்ளூர் செய்திகள்

5 ஆண்டுகளில் 30 பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு மூடல்

அனைவருக்கும் இடைநிலைக்கல்வித் திட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும், 100 உயர்நிலை பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு வருகிறது; 2010ம் ஆண்டு வரை தரம் உயர்த்தப்பட்ட, 2,200 பள்ளிகளுக்கு ஐந்து அறிவியல் பாட ஆசிரியர்கள் பணியிடங்களே வழங்கப்பட்டன. கலை பாட ஆசிரியர்கள், பணி உருவாக்கப்படவில்லை. கோவை மாவட்டத்தில், 60 மேல்நிலைப்பள்ளிகளில் இதுவரை, கலைப்பாடப்பிரிவு ஆசிரியர்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.இதுபோன்று, கலை பாடப்பிரிவு இல்லாத சில பள்ளிகளில், தலைமையாசிரியர்கள் பொறுப்பில், தற்காலிக ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், இவர்களுக்கு முறையாக ஊதியம் கொடுக்கமுடியாமல் தொடர்ந்து மூடுவிழாவை சந்தித்து வருகிறது.தமிழ்நாடு தலைமையாசிரியர்கள் சங்க மாநில ஆலோசகர் பாலகிருஷ்ணன் கூறுகையில், கோவையில் கடந்த ஐந்தாண்டுகளில், 30 பள்ளிகளில் கலைப்பாடப்பிரிவு மூடப்பட்டுள்ளது. தற்போது செயல்பட்டு வரும், பள்ளிகளிலும் ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் அவதிப்படுகின்றனர். ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக, எளிமையான பாடமாக இருப்பினும் மாணவர்கள் தோல்வி அடையும் சூழல் ஏற்படுகிறது.கலைப் பிரிவு இல்லாவிட்டால், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் பலரின் எதிர்காலம் கேள்விக்குறியாகும். ஆட்சி அமைக்கும் கட்சி எதுவானாலும் இப்பிரச்னைக்கு மாணவர்கள் நலன்கருதி உடனடி தீர்வை ஏற்படுத்த வேண்டும், என்றார்  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்