58 கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கைக்கு தடை
ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் பதிவாளர், பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிவிப்பு:தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கீழ் செயல்படும், கல்வியியல் கல்லுாரிகளில், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலான, என்.சி.டி,இ.,யின் அங்கீகாரம் பெறாமலும், அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டும் செயல்படும் கல்லுாரிகளில், மாணவர்களை சேர்க்க அனுமதியில்லை.இந்த கல்லுாரிகளில், பி.எட்., - எம்.எட்., - பி.எஸ்சி., - பி.எட்., போன்ற படிப்புகளில், மாணவர்களை சேர்க்கக்கூடாது. அவ்வாறு விதிகளை மீறி சேர்த்தால், அந்த மாணவர்களுக்கு ஆசிரியர் கல்வியியல் பல்கலை எவ்வித பொறுப்பும் ஏற்காது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது. இந்த சுற்றறிக்கையுடன், அங்கீகாரம் புதுப்பிக்கப்பட வேண்டிய, 58 கல்லுாரிகளின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.