ரூ.63 கோடி மதிப்பில் 57 பள்ளிகளை மேம்படுத்த தமிழக அரசு திட்டம்
வேலூர்: தமிழகத்தில் ரூ.63 கோடி மதிப்பில் 57 மேல்நிலைப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்த மாநில அரசு முடிவு செய்துள்ளது. நாபார்டு வங்கி நிதி உதவியுடன் இத்திட்டம் மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த வங்கி ரூ.50.44 கோடி நிதி உதவி அளிக்கும் நிலையில், தமிழக அரசு ரூ.12.92 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இத்திட்டத்தில் 57 மேல்நிலைப்பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், கழிப்பிட வசதி மேம்படுத்தப்பட உள்ளது. இப்பணிகள் அனைத்தும் வரும் 2010ம் ஆண்டிற்குள் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.