தேர்வு என்பது மற்றொரு கல்வியியல் நடைமுறை: முதல்வர் ஸ்டாலின்
மேலும் அவர் பதிவிட்டு இருப்பதாவது: உங்களது கல்வி வாழ்க்கையின் அடுத்த கட்டமான பிளஸ் 2 இறுதி தேர்வை அச்சுமற்று எதிர்கொள்ளுங்கள். தெளிவாக எழுதுங்கள். நீங்கள் எதிர்பார்க்கும் வெற்றி அமைய வாழ்த்துகிறேன்.தேர்வு என்பது மற்றொரு கல்வியியல் நடைமுறைதானே தவிர அதுவே உங்களது திறமையை எடை போடுவதற்கான அளவு கோல் கிடையாது. எனவே எவ்வித பதற்றமும் வேண்டாம்.பெற்றோர்களும் இதனை நன்கு உணர்ந்து குழந்தைகள் மீதான தேவையற்ற அழுத்தங்களை தவிர்த்து மாணவர்களின் வெற்றிக்கு ஊக்கமளி்க்க வேண்டும். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டு உள்ளார்.