உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / புதுச்சேரி / புதுச்சேரி பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை 

புதுச்சேரி பல்கலைக்கழக விடுதியில் மாணவி தற்கொலை 

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை விடுதியில் மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். திருவாரூர், நேதாஜி நகர், கொடிமரத்து வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் மகள் உமா மகேஷ்வரி, 22;  புதுச்சேரி பல்கலைக்கழக விடுதியில் தங்கி, பி.எஸ்சி., கணிதம் இறுதி ஆண்டு படித்து வந்தார். இவர் குடும்ப பிரச்னை காரணமாக கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்துவந்தார். இந்நிலையில் நேற்று இறுதி ஆண்டு சேர்வதற்காக தனது தந்தையை மொபைலில் தொடர்பு கொண்டார். அவர் போனை எடுக்காததால் மனமுடைந்த அவர், தனது நண்பருக்கு போன் செய்து தனக்கு வாழ பிடிக்கவில்லை என கூறி போனை துண்டித்தார். இதையடுத்து அவரது நண்பர் அளித்த  தகவலின் பேரில் விடுதி காப்பாளர்கள் சென்று பார்த்தபோது, விடுதி அறையில் உள்ள பேனில் உமா மகேஸ்வரி துாக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். அதிர்ச்சியடைந்த விடுதி காப்பாளர் சக ஊழியர்களின் உதவியுடன் உமாமகேஷ்வரியை மீட்டு கதிர்காமம் அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவரை பரிசோித்த டாக்டர், உமாமகேஷ்வரி ஏற்கனவே இறந்துவிட்டதை உறுதி செய்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காலாப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.       


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !