உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / ரோந்து நடவடிக் கை கமிஷனர் தீவிரம்

ரோந்து நடவடிக் கை கமிஷனர் தீவிரம்

சென்னை போலீஸ் இணை, துணை கமிஷனர்கள், காலை மற்றும் மாலையில் ரோந்து செல்ல வேண்டும்' என, சென்னை போலீஸ் கமிஷனர் அருண் உத்தரவிட்டுள்ளார்.சென்னை வேப்பேரியில் உள்ள, கமிஷனர் அலுவலகத்தில், குற்றத்தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, இணை, துணை கமிஷனர்களுடன், கமிஷனர் அருண் நேற்று ஆலோசனை கூட்டம் நடத்தினார்.அப்போது, சென்னையில் உள்ள, புளியந்தோப்பு, வண்ணாரப்பேட்டை என, காவல் மாவட்டம் வாரியாக, சமீபத்தில் நடந்த குற்றங்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.அப்போது, இணை, துணை கமிஷனர்கள் அலுவலகத்தில் இருந்து உத்தரவுகளை பிறப்பித்து, குற்றவாளிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பது வழக்கமான நடைமுறை தான். ஆனால் ரோந்து செல்லும் போது தான் மக்களின் கருத்தை அறிய முடியும். குற்றங்களையும் கட்டுப்படுத்த முடியும்.அதனால், இணை, துணை கமிஷனர்கள், காலை, மாலை என, இரண்டு வேளைகளிலும் ரோந்து செல்ல வேண்டும்.இவ்வாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சுந்தரம் விஸ்வநாதன்
ஜூலை 11, 2024 08:22

அப்போ இம்புட்டு நாளும் ரோந்து போகாமலேயே போனதா பொய்க்கணக்கு எழுதி மாமூல் வசூல் செஞ்சுக்கிட்டு இருந்தார்களா


Velu Karuppiah
ஜூலை 11, 2024 07:51

இவர்கள் ரோந்து போவதில் எந்த தவறும் இல்லை. இவர்கள் உபயோகிக்கும் வாகனங்களுக்கு போதுமான எரிபொருள் வசதி செய்து கொடுங்கள். இல்லை என்றால் அந்த செலவுகளுக்கு பொது மக்களிடம் தான் வசூல் செய்வார்கள்.


Thiruvengadam Ponnurangam
ஜூலை 11, 2024 05:17

அப்படியே ரோந்து போற நேரம் இடம் தேதி எல்லாம் சொல்லிடீங்கன்னா அவங்களுக்கு வசதியா இருக்கும் அய்யா. மக்கள் செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள். திட்டம் இருந்து என்ன பயன், அதனை செயல்படுத்தும் திறன் இருக்க .. அதிகாரம் இருக்க என்பதே மக்களின் கேள்வி


Mani . V
ஜூலை 11, 2024 04:42

எது கலெக்ஷனுக்கான ரோந்து நடவடிக்கையா ஆபீஸர்?