உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / குழந்தை உயிரிழப்பு

குழந்தை உயிரிழப்பு

பெருந்துறை:காஞ்சிக்கோவில், அரியங்காட்டை சேர்ந்த ராஜா மனைவி பார்கவி, 29; தம்பதிக்கு நான்கு மாதத்தில் பெண் குழந்தை உள்ளது. நேற்று அதிகாலை குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார். சிறிது நேரம் கழித்து பார்த்தபோது அசைவின்றி காணப்பட்டது. இதனால் பெருந்துறை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். மருத்துவ பரிசோதனையில், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். காஞ்சிக்கோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !