பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது வழக்கு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம், இந்திரா நகரை சேர்ந்த சக்திவேல் மனைவி சரோஜா,26; இவர் சொந்த செலவிற்காக மாமியார் பெயரில் உள்ள இடத்தின் பத்திரத்தை அதே பகுதியை சேர்ந்த மணிகண்டன் மனைவி மகேஸ்வரி என்பவரிடம் அடமானம் வைத்து ரூ.50 ஆயிரம் கடன் பெற்றார்.ஒராண்டு கழித்து சரோஜா கடந்த, 1ம் தேதி அசல் மற்றும் வட்டி பணத்தை கொடுத்து பத்திரத்தை திருப்பி கேட்டார். அப்போது அவர் கூடுதலாக, 19 ஆயிரத்து 400 ரூபாய் பணம் கொடுத்தால் தான் தருவேன் என்று கூறி பத்திரத்தை கிழித்து சேதப்படுத்தி சரோஜாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் மகேஸ்வரி மீது வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.