உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / காஞ்சிபுரம் /  டிராக்டர் இஞ்சின் பழுதால் குப்பை சேகரிப்பதில் சிக்கல்

 டிராக்டர் இஞ்சின் பழுதால் குப்பை சேகரிப்பதில் சிக்கல்

காஞ்சிபுரம்: வாலாஜாபாதில் டிராக்டர் இஞ்சின் பழுதால், குப்பை சேகரிப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. வாலாஜாபாத் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. வீடுகள் மற்றும் தெருக்களில் சேரும் குப்பை, துாய்மை பணியாளர்கள் மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் மூலமாக சேகரித்து வருகின்றனர். சேகரித்த குப்பையை, இரண்டு டிராக்டர்கள் மூலமாக, குப்பை கிடங்கிற்கு எடுத்து சென்று கொட்டி தரம் பிரித்து வருகின்றனர். ஒரு சில நேரங்களில், குப்பை எடுத்து செல்லும் டிராக்டரின் இஞ்சின் பழுது ஏற்பட்டு, சாலையோரம் மற்றும் நடுதெருவில் நின்று விடுகிறது. இதில், ஒரு டிராக்டரை பழுது நீக்க, 20 நாட்களுக்கு முன், டிராக்டர் உதிரி பாகங்களை பேரூராட்சி நிர்வாகத்தினர் பிரித்தனர். அதன் பிறகு, பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வரவில்லை. இதனால் , சாலையோரம் நிறு த்தி வைத்திருக்கும் டிராக்டரின் பின் பகுதியில் குப்பை சேகரிக்கும் தொட்டி யில் குப் பை கொட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பேரூராட்சி நிர்வாகம் வாகனத்தை விரைந்து பழுது நீக்கி பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !