மலைப்பாம்பு மீட்பு
வாடிப்பட்டி: ராமையன்பட்டி விவசாயி தினகரன் 48, இவர் நேற்று மதியம் தனது தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்ச சென்றபோது மலைப்பாம்பு ஊர்ந்து சென்றதைப் பார்த்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தார். வாடிப்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் சென்ற வீரர்கள் 10 அடி நீள மலைப்பாம்பை மீட்டு சோழவந்தான் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். குலசேகரன்கோட்டையை அடுத்த வனப்பகுதியில் மலைப்பாம்பு விடப்பட்டது.