உள்ளூர் செய்திகள்

இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

தனலட்சுமி சீனிவாசன் பெரம்பலூர் மருத்துவமனை மற்றும் ஷவ்கத்துல் இஸ்லாம் (பா.மு.ச)பள்ளிகள் மற்றும் வழுத்தூர் ஜமாத்தார்கள் இணைந்து நடத்தும் இதயநோய் சிகிச்சை,மற்றும் பொதுமருத்துவ சோதனை மற்றும் இருதய சோதனை இலவச மருத்துவ பரிசோதனை முகாம் ஆரம்ப பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பங்கேற்று விழிப்புணர்வு சிகிச்சை பெற்றனர். இந்த நிகழ்வில் பாபநாசம் kings lions club சாசனத்தலைவர் தம்பி இபுறாஹிம், தற்போதைய செயலாளர் முருகன், தலைவர் பாரூக், அடுத்த செயலாளர் வீரா செல்வம், லயன் வெள்ளம்ஜி அப்துல் ரவூப் பங்கேற்று மருத்துவர் மற்றும் பள்ளிகூடம் நிர்வாகிகளுக்கு பொன்னாடை அணிவித்து உற்சாகப்படுத்தினர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த முகாம் மாலை வரை விறுவிறுப்பாக நடந்தது. பரிசோதனைகளும், மருத்துவர்களின் ஆலோசனைகளும் மிக்க பயனுள்ளதாக இருந்ததாக பொதுமக்கள் கூறினர் . - தினமலர் வாசகர் அபூமாஹிர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்