நட்பின் இலக்கணமாம் நாசிக்கில் இருந்து
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைகளின் அழகி வால்பாறை அருகில் உள்ள முடிஸ் என்ற சின்ன நகரத்தில் உள்ள மத்திய நடுநிலை பள்ளியில் பயின்ற 1987 முதல் 1995 வரை படித்த மாணவ மாணவியர்கள் சுமார் 30 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்தித்து உள்ளனர். இந்த சந்திப்பிற்கு பெயராக "மீண்டும் ஒரு தேன் கூடு" என்று பெயர் வைத்துள்ளனர். நாசிக் நகரை சேர்ந்த கமலக்கண்ணனின் ஆலோசனை மற்றும் ஒருங்கிணைப்பால் இந்த சந்திப்பு கோவையில் 23/02/25 அன்று நடைபெற்றது. பல்வேறு நாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் கலந்து கொண்டது நட்பின் இலக்கணம். இந்த சந்திப்பில் பின்னி, ஜோதி, நாசர், பிரசாத் மற்றும் தோழிகள் ராதா தங்கம், ஜெய்ஸ்ரீ முன்னின்று நடத்தினர். பள்ளிப் பருவத்தில் பிரிந்த மாணவ மணிகள் இன்று அனைவரும் ஒரு சேர... அனைவரது கண்களில் ஆனந்தக் கண்ணீர் மழை. மனதில் அன்றைய நினைவுகள் அசைபோட மகிழ்ச்சித் தென்றல். தேனீக்களாய் தேயிலை தோட்டம் பிரிந்து மீண்டும் அடைந்தோம் நம் கூட்டில்... - நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்