உள்ளூர் செய்திகள்

நாமசங்கீர்த்தன விழா 2024

சிட்டி யூனியன் வங்கி, ஸ்ரீராம் பைனான்ஸ் நிறுவனம், இன்டகிரேட் என்டர்பிரைஸ், மற்றும் நாமசங்கீர்த்தன சேவா டிரஸ்டின் 24வது ஆண்டு "நாமசங்கீர்த்தன விழா 2024" டிசம்பர் சென்னை கிருஷ்ண கான சபாவில் மிக விமரிசையாக நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சியில், சென்னையை சார்ந்த கானஸ்ம்ருதி பஜன் மண்டலியினர் பங்கேற்றனர். அவர்களின் நாமசங்கீர்த்தனம் வெகுவாக இணையதளங்களில் பேசப்பட்டது. ஸ்ரீ உடையாளூர் கல்யாணராமன் இந்த மண்டலியை பாராட்டி பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீ உடையாளூர் கல்யாணராமன் பங்கேற்ற ராதா கல்யாணம் மற்றும் ஆஞ்சநேய உற்சவத்துடன் விழா நிறைவுற்றது. - நமது செய்தியாளர் எம்.வி.தியாகராஜன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்