நாசிக்கில் பரமபத வாசல் திறப்பு
பரமபத வாசல் என்பது பெருமாளின் வசிப்பிடமாக அறியப்படும் வைகுண்ட வாசலாகும். இதனை சொர்க்க வாசல், வைகுண்ட வாசல் என அழைக்கின்றனர். இந்த வாசலைக் கடந்தால் முக்தி கிடைக்குமென்பது அனைவரது ஆன்மிக நம்பிக்கை. வைகுண்ட ஏகாதேசி நாளன்று திருமால் பெருமாள் கோயில்களில் பரமபத வாசல் திறக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. நாசிக் நகரில் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள புகழ்பெற்ற கங்காப்பூர் பாலாஜி கோவிலில் பரமபத சொர்க்க வாசல் திறக்கப்பட்டது. மிக நேர்த்தியான அலங்காரத்தில் பாலாஜி பெருமாள் மற்றும் தாயார் தரிசனம் ஜொலித்தனர். ஏராளமான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர். சொர்க்கவாசல் திறப்பில் கலந்து கொண்டு பக்தர்கள் ''கோவிந்தா கோவிந்தா'' கோஷத்துடனும், ''நாராயணா ரங்கநாதா பாண்டுரங்கா'' பெருமாளை கோஷமிட்டு அழைத்து வழிபட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. - நமது செய்தியாளர் பா. ஸ்ரீதர்