அனைவரின் நலனுக்காக ஸ்ரீ விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம்
சமீபத்தில் முடிவடைந்த ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி 5 நாட்கள் திருவிழாவில் செக்டர் 22, நொய்டா ஸ்ரீ வரசித்தி விநாயகர் கோவில் ஸ்ரீ வரசித்தி விநாயகரின் சிறப்பு அபிஷேகம், செப்- 7 'அனைவரின் நலனுக்காக' நடத்தப்பட்டது . அண்மையில் முடிவடைந்த 5 நாட்கள் ஸ்ரீ விநாயகர் சதுர்த்தி திருவிழா வெற்றிகரமாக நடத்திக் கொடுத்த நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொடர்புடைய அனைவரின் நலனுக்காக இந்த சிறப்பு அபிஷேகம் செய்த வேதிக் பிரச்சார் சன்ஸ்தான் நிர்வாகத்திற்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர் . இந்த சிறப்பு அபிஷேகம் கோவிலின் ஸ்ரீ ஜெகதீஷ் சிவச்சாரியார் செய்தார் . பிறகு, ஸ்ரீ வரசித்தி விநாயகரை சிறப்பு அலங்காரத்தில் அலங்கரிக்கப்பட்டது. தொடர்ந்து மகா தீபாராதனை , பிரசாதம் அனைவருக்கும் விநியோகிக்கப்பட்டது.இந்த கோவிலை நிர்வகிக்கும் வேதிக் பிரச்சார் சன்ஸ்தான், ஒத்த எண்ணம் கொண்ட பக்தர்களால் தொடங்கப்பட்டு கடந்த நாற்பது வருடங்களாக பக்தர்களுக்கு சேவை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கோவில் கோபுரம், பிள்ளையாரை தரிசனம் செய்பவர்களுக்கு கோடி புண்ணியம்!நமது செய்தியாளர், எஸ்.வெங்கடேஷ், நொய்டா.