உள்ளூர் செய்திகள்

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் திருக்குறள் போட்டி

நவி மும்பை தமிழ்ச்சங்கத்தில் நவம்பர் 13 மற்றும் 14ஆம் தேதிகளில் அனைத்துப் பள்ளி மானவர்களுக்கான திருக்குறள் ஒப்புவித்துப் பொருள்கூறும் போட்டி, திருக்குறள் அடிபடையிலான பேச்சுப் போட்டி, 18 வயது மேற்பட்டவர்களுக்கான கட்டுரைப் போட்டி ஆகியவை நடைபெற்றன. இந்த நிகழ்வு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டும் நூற்றுக் கணக்கான மாணவ மாணவியர் இப்போட்டிகளில் பங்கேற்றனர். பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பங்கேற்பு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. - நவி மும்பையிலிருந்து தினமலர் வாசகி மீனாட்சி வெங்கடேஷ், செயலாளர், நவி மும்பை தமிழ்ச்சங்கம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !