இந்தியாவை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தவர் வல்லபாய் படேல். எனவே அவர் நாட்டின் இரும்பு மனிதர் என போற்றப்படுகிறார். இவர், குஜராத் மாநிலம், ஆனந்த் மாவட்டம், கரம்சாத் என்ற கிராமத்தில் 1875, அக்., 31ல் பிறந்தார். இவரது 150வது பிறந்த நாள் இன்று தேசிய விழாவாக கொண்டாடப்பட்டது.