இன்றைய போட்டோ
அனைத்து உயிர்களிடத்தும் அன்பு.!எல்லா உயிரினங்களையும் நேசிக்கும் விதத்தில் நாய்களையும், பூனைகளையும் அரவணைத்து பாதுகாப்போம் என்பதை வலியுறுத்தும் விதமாக கோவை மாநகராட்சி சார்பில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அழகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவை பார்ப்பவர்களை கவரும் விதத்தில் உள்ளன.
16-01-2024 | 12:13
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி அருகே மசினகுடி பகுதியில், ஏராளமான ஆசியன் உள்ளிநெக் ஸ்டாக் பறவைகள் இரை தேடி அதிகளவு வந்துள்ளன.
30-03-2026 | 16:46
மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறுகிறது. அலுவலக நுழைவாயிலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
30-03-2026 | 16:46
ஊட்டி எட்டினஸ் சாலையில், தனியார் சிலிண்டர் வினியோக அலுவலம் மூடியதால் , வாடிக்கையாளர்கள் சிலிண்டருடன் சாலை மறியலிலில் ஈடுபட்டனர்.
30-03-2026 | 16:46
உடுமலை தி.மு.க. வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த தொண்டர்களின் வாகனங்கள்நீண்ட வரிசையில் நிற்கின்றன.
30-03-2026 | 16:45
கோவையில் வேட்பு மனு தாக்கல் நடைபெறும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. இடம்: தடாகம் ரோடு.
30-03-2026 | 16:45