இன்றைய போட்டோ
தினமலர் நாளிதழ் மாணவர் பதிப்பான பட்டம் இதழ் சார்பில் தேனி கம்மவார் சங்கம் மெட்ரிக் பள்ளியில் நடந்த வினாடி வினா போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுடன் இடமிருந்து பட்டம் ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன், பள்ளி துணை முதல்வர் ராம்குமார், தாளாளர் சீனிவாசன், முதல்வர் மீனாகுமாரி, பட்டம் ஒருங்கிணைப்பாளர் சத்யபாமா.
19-01-2024 | 19:16
மேலும் இன்றைய போட்டோ
ஓட்டு போடும் தேர்தல் நாள் வரை உங்களை அழைத்துச் செல்ல ஷேர் ஆட்டோக்களை அனுப்பி, ஒவ்வொரு ஆளுக்கும் காசு கொடுத்து பிரசாரத்திற்கு அழைத்துச் சென்ற பின் அம்போ என்று விட்டுவிடுவர் இன்றைய அரசியல்வாதிகள்.
15-04-2026 | 18:11
கிராமங்களில் சுவர் விளம்பரம் வரைவதில் கட்சியினர் சமமாக பிரித்துக் கொள்கின்றனர். கோவை தொண்டாமுத்தூர் தொகுதி பன்னீர்மடை பகுதியில் போட்டியிடும் அதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் சுவர் விளம்பரம் இது.
15-04-2026 | 18:10
கோவை ஆவராம்பாளையம் பகுதியில், சிங்கநல்லூர் தொகுதி அ. தி. மு. க., வேட்பாளர் ஜெயராமை ஆதரித்து பா. ஜ., முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசினார்.
15-04-2026 | 18:04
சட்டசபை தேர்தலையொட்டி கடலூர் அண்ணாமலை செட்டி சாவடி செக் போஸ்டில் துணை ராணுவ படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
15-04-2026 | 18:03
சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசலில் சிக்கித்தவிக்கும் வாகன ஓட்டிகள். இடம். உத்தமர் காந்திசாலை
15-04-2026 | 18:02
கடலூரில் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி கடலூர் தொகுதி தபால் வாக்கு மையத்தில் வாக்குப்பதிவு அலுவலர்கள் தபால் வாக்கு செலுத்த நீண்ட வரிசையில் நின்றனர்.
15-04-2026 | 18:02
உடுமலை சட்டசபை தொகுதி வாக்குச்சாவடியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பு வித்தியாசாகர் கலைக்கல்லூரியில் நடந்தது.
15-04-2026 | 18:02