உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஊட்டி பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில், ஆதிதிராடவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக நடந்த மனிதநேய வாரவிழாவில், மாவனல்லா உண்டு உறைவிட பள்ளி மாணவிகள் நடனமாடினார்கள்.

30-01-2024 | 17:19


மேலும் இன்றைய போட்டோ

எச்.ஐ.வி/எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை அமைச்சர் அருண்ராஜ் தொடங்கி வைத்தார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.

12-10-2026 | 18:37


எய்ட்ஸ் மற்றும் பால்வினை தொற்று நோய்கள் குறித்த விழிப்புணர்வு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார். இடம் :கலைவாணர் அரங்கம், சென்னை.

12-10-2026 | 18:37


அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நகரில் நடைபெற்ற அதிக எடை கொண்ட பூசணிக்காய்க்கான எடைக் போட்டியில் , பிராண்டன் டாசின் பூசணிக்காய்(எடை 1,084 கிலோ) வெற்றி தேர்வு பெற்றது அதனை அவர் மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்.

12-10-2026 | 18:06


காரியாபட்டி அருகே செவல்பட்டி துவக்கப்பள்ளி சுற்றுசுவர் சேதமடைந்துள்ளது.

12-10-2026 | 17:26


குன்னூரில் இருந்து பர்லியார் வரையிலான மலைப்பாதையில் மழை பொழிவால் ஆங்காங்கே உள்ள நீர்வீழ்ச்சிகளில் வெள்ளி உருகுவது போல் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. ரம்மியமான காட்சியை சுற்றுலா பயணியர் ரசித்து செல்கின்றனர்.

11-10-2026 | 22:30


வால்பாறையில் பருவமழைக்கு பின் கண்ணுக்கு எட்டிய தூரம் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டம். சுற்றுலா பயணியரை வசீகரிக்கின்றன. இடம்: மாணிக்கா எஸ்டேட்.

11-10-2026 | 22:30


காலையில் நிலவும் பனியில் தகதகவென உதிக்கும் சூரியன் பார்க்க கண்கொள்ளா காட்சியாக உள்ளது. இடம்: உடுமலை.

11-10-2026 | 22:29


மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். வரும் 17 ம் தேதி துர்கா பூஜை துவங்க உள்ள நிலையில் பந்தலில் துர்கா தேவியின் சிலையை நிறுவ எடுத்துச் சென்ற பக்தர்கள். இடம்: நாடியா.

11-10-2026 | 22:29


சென்னை கிண்டி ஐ.ஐ.டி வளாகத்தில் உள்ள ஜலகண்டேஸ்வரர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்த பிரதமர் மோடி.

11-10-2026 | 20:08