இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
ஊட்டி பந்தலூரில் கோடை வெயிலுக்கு மத்தியில் பெய்த மழையால் பசுமையாக காட்சியளிக்கும் தேயிலை தோட்டம் பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
06-02-2026 | 07:52
காஞ்சிபுரம் மாவட்டம், நத்தப்பேட்டை ஏரியில் எப்போதும் இல்லாத வகையில், 213 சாம்பல் தலை ஆள்காட்டி பறவைகள் முகாமிட்டுள்ளது கண்கெடுப்பில் தெரியவந்துள்ளது.
06-02-2026 | 07:26
சென்னை அடையாறு ஆற்றின் முகத்துவார பகுதியில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமை, அகற்றப்படாததால் கடும் துர்நாற்றம் வீசுகிறது. இடம்: பெசன்ட் நகர் கடற்கரை.
06-02-2026 | 07:23
உக்ரைனில் கீவ் நகரில் உள்ள டர்னிட்சியா அனல் மின் நிலையத்தில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட சேதங்களை சீரமைக்கும் பணியாளர்கள்.
05-02-2026 | 22:33
காஷ்மீரில் பனிமழை பொழிந்து ரம்மியமாக காட்சி அளிக்கிறது. அனந்த்நாக் மாவட்டத்தின் கவ்ரான் கிராமத்தில் பனிக்குவியல்கள் மீது சறுக்கி விளையாடிய சிறுவர் - சிறுமியர்.
05-02-2026 | 22:28
தமிழக கைத்தறி தொழில்கள் வளர்ச்சி கழகம் சார்பில் சென்னையில் நான்கு நாட்கள் நடக்கும் கைவினைப் பொருட்கள் கண்காட்சியில் இடம்பெற்ற மரத்தினால் ஆன சைக்கிளுடன் நிற்கும் சிறுவன்.
05-02-2026 | 22:26