இன்றைய போட்டோ
சங்கர நேத்ராலயா மருத்துவ ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் பத்ரிநாத் பிறந்தநாளை முன்னிட்டு, விழிகளில் ஒளியேற்றும் சங்கர நேத்ராலயா எனும் நூல் வெளியீட்டு விழா நடந்தது. இதில் இடமிருந்து வலம் - சங்கர நேத்ராலயா தலைவர் கிரிஷ் சிவ ராவ், நூலாசிரியர் இருங்கோவேள், எழுத்தாளர் சிவசங்கரி, நூலின் முதல் பிரதியை பெற்றுக் கொண்ட முதுநிலை நிபுணர் நிர்மலா சுப்பிரமணியன், நூலை வெளியிட்ட ஜி.ஆர்.டி ஜூவல்லர்ஸ் தலைவர் ராஜேந்திரன், திரைப்பட பாடலாசிரியர் வைரமுத்து, தொழிலதிபர் நல்லி குப்புசாமி மற்றும் டாக்டர் சுரேந்திரன். இடம் : நுங்கம்பாக்கம், சென்னை
24-02-2024 | 19:00
மேலும் இன்றைய போட்டோ
திருநெல்வேலி மாவட்டம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வந்த நிலையில் விவசாயிகள் இயந்திர நடவுக்காக நாற்றுபாவும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
29-10-2025 | 10:02
புதுச்சேரி சாரம் வள்ளி தெய்வானை சமேத ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழாவில் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
29-10-2025 | 08:59
ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் டஸ்ஸெல்டோர்ப் நகரில் உள்ள குன்ஸ்ட்பாலஸ்ட் கலை அருங்காட்சியகத்தில், பழங்கால கலை பொருட்களுடன் அப்போது பயன்படுத்திய வாசனை திரவியங்களும் இடம்பெற்றன.
29-10-2025 | 07:36
கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் 2021 முதல் ராணுவ ஆட்சி நடக்கிறது. வரும் டிசம்பரில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. அந்நாட்டு தலைநகர் உள்ளிட்ட முக்கிய இடங்களில் தேர்தல் பிரசாரம் துவங்கியது. இடம்: யாங்கூன்.
29-10-2025 | 07:31
வட்ட வடிவிலான காக்கி நிற தொப்பி அணிந்து வந்த கர்நாடக போலீசாருக்கு நேவி நீல நிறத்தில் புதிய தொப்பி வழங்கப்பட்டு உள்ளது. அறிமுக விழாவில் புதிய தொப்பியுடன் போலீசார். இடம்: விதான் சவுதா, பெங்களூரு
29-10-2025 | 07:26
கடல் சீற்றம் காரணமாக சென்னை மெரினா கடற்கரை பகுதியில் அலைகள் அதிகமாக இருந்ததால் மண்ணரிப்பு காணப்பட்டது.
29-10-2025 | 07:22
புயல் காரணமாக பல்வேறு ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டதால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய வளாகத்தில் குடும்பத்துடன் காத்திருந்த பயணிகள்.
29-10-2025 | 07:19