உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஶ்ரீமன் அய்யா வைகுண்ட சுவாமியின் 192 வது அவதார தின விழா மற்றும் ஶ்ரீ மகாவிஷ்ணுவின் அவதாரம் ஶ்ரீ வைகுண்டசுவாமி அருளிய சனாதன வரலாறு புத்தக வெளியீட்டு விழா கவர்னர் மாளிகையில் நடந்தது இதில் புத்தகத்தை வெளியிட்ட தமிழக கவர்னர் ரவி உடன் இடமிருந்து நூலாசிரியர் ராமலிங்கம், மணலி அய்யா வைகுண்ட தர்மபதி நிர்வாகி துரைப்பழம், துலங்கும்பதி துவரயம்பதி நிர்வாகி ராமநாதன், அகிலம் அகாடமி நிறுவனர் சீதாலட்சுமி, அய்யா வழி சேவை அமைப்பு செயலர் சுரேஷ் பொண்ணு நாடார். இடம் : கிண்டி.

04-03-2024 | 11:50


மேலும் இன்றைய போட்டோ

கோவை கண்ணப்பன் நகர் முத்துமாரியம்மன் கோயிலின் 54ம் ஆண்டு திருக்கல்யாண விழாவில் குத்து விளக்கேற்றி வழிபட்ட பக்தர்கள்.

23-05-2026 | 07:56


புதுச்சேரி ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கில் 76-வது தேசிய அளவிலான ஜூனியர் கூடைப்பந்து போட்டி துவக்க விழாவில், புலி ஆட்டம் ஆடிய சிறுவன் கூல்ட்ரிங்க்ஸ் குடித்து தாகத்தை தணித்தான்.

23-05-2026 | 07:37


விருத்தாசலம் மார்க்கெட் கமிட்டியில் விவசாயிகள் கொண்டு வந்த பொருட்களை தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா எம்.எல்.ஏ.,ஆய்வு செய்தார்.

22-05-2026 | 20:32


விழுப்புரம் பழமையான நகராட்சி மருத்துவமனையாக இருந்த கட்டிடம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது

22-05-2026 | 20:32


காரமடை அடுத்துள்ள கிராம பகுதிகளில் சின்ன வெங்காயம் பயிர் செய்ய தயார் படுத்தப்பட்டுள்ள விளைநிலங்கள்.

22-05-2026 | 19:19


சிவகங்கை - தொண்டி ரோடு பைபாஸ் ரோடு சந்திப்பில் ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்து வருகிறது

22-05-2026 | 19:19


திருப்பூரில், அதிகரித்து வரும் வேலைவாய்ப்புகளால் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பு.

22-05-2026 | 19:19


கோடை விடுமுறை, மற்றும் மலையரசியான ஊட்டி மலர் கண்காட்சி ஆகிய காரணங்களால் மேட்டுப்பாளையத்திலிருந்து, கோத்தகிரி, ஊட்டி செல்ல பஸ் ஸ்டாண்டில் சுற்றுலா பயணிகள் அதிகம் வருகை தருகின்றனர்.போதுமான பஸ்கள் இல்லாத நிலையில் பயணிகள் அவதி.

22-05-2026 | 19:18


கோடை வெயிலுக்கு குளு குளு ட்ரீட் செம்பரம்பாக்கம் ஏரி அணையில் துள்ளி குதித்து குளித்து மகிழ்ந்த இளைஞர்கள்

22-05-2026 | 19:18