உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் 75ஆம் ஆண்டு விழா நடந்தது. இதில் வரலாற்று புத்தகம் வெளியிடப்பட்டது. இடமிருந்து வலம் - பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி கிரிஜா வைத்தியநாதன், இந்திய குழந்தைகள் நல கவுன்சில் தலைவர் ஆண்டாள் தாமோதரன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் நிர்வாகி மனோஜ் குமார் சொந்தாலியா , அறங்காவலர் நட்ராஜன், வரலாற்று புத்தகத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், டென்மார்க் பிராடே ஸ்டிப்டங் போர்ட் தலைவர் லார்ஸ் ஆட் பீட்டர்சன், பால மந்திர் காமராஜ் அறக்கட்டளையின் தலைவர் என்.குமார், நிர்வாகி ரமேஷ் மங்கலேஷ்வரன் மற்றும் பொது செயலர் மாயா கெய்டொண்டே. இடம் : சேத்துப்பட்டு, சென்னை

10-03-2024 | 22:10


மேலும் இன்றைய போட்டோ

கிழக்காசிய நாடான தென்கொரியாவில் அரசு கொண்டு வரும் புதிய தொழிலாளர் சட்ட சீர்திருத்தங்கள் மற்றும் பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தும் அமெரிக்காவின் வரி விதிப்பு உள்ளிட்டவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்நாட்டின் வர்த்தக தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைநகர் சியோவில் ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி நடத்தினர்.

09-11-2025 | 07:40


சென்னையில் நடந்த ஆசிய மாஸ்டர் தடகள போட்டியில் 50 வயதைத் தாண்டியவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற வீராங்கனையர்.

09-11-2025 | 07:35


ராமேஸ்வரம் அருகே பாம்பன் சின்னப்பாலத்தில் கடல் உள்வாங்கியதால் படகுகள் தரை தட்டி நின்றன.

09-11-2025 | 07:32


உத்தரபிரதேசம் வாரணாசியில் நடந்த நிகழ்ச்சியில், 4 புதிய வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பின், ஒரு ரயிலில் ஓட்டுநர் அறைக்கு சென்று லோகோ பைலட்டுகளுடன் ரயில் இயக்கம் குறித்து கேட்டறிந்தார்.

09-11-2025 | 07:30


இளைஞர்களை நான்கு ஆண்டுகளுக்கு ராணுவத்தில் பணியமர்த்தி பயிற்சி அளிக்கும் 'அக்னி வீர்' திட்டம் அமலில் உள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு நிரந்தர பணி வழங்கப்படுகிறது. உ.பி.,யின் வாரணாசியில் நடந்த அக்னி வீரர்கள் சேர்க்கை தேர்வில் பங்கேற்ற இளைஞர்கள்.

09-11-2025 | 07:22


சுரைக்காய்க்கு உப்பு இல்லை என்பது பழமொழி. குறைந்தபட்ச விலையும் இல்லாததால், சுரைக்காயை பறிக்காமல் தோட்டத்திலேயே விட்டு விட்டனர் விவசாயிகள். இடம்: மானூர், திருநெல்வேலி மாவட்டம்.

09-11-2025 | 07:17


வடகிழக்கு மாநிலமான அசாமின் குவஹாத்தியில் 93வது விமானப்படை தினம் விரைவில் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, நடந்த விமான சாகச நிகழ்ச்சிக்கான ஒத்திகையில் ஈடுபட்ட நம்வீரர்கள், மூவர்ண கொடியின் வண்ணத்தை வானில் வரைந்து பார்வையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தினர்.

09-11-2025 | 07:13


கடந்த இரண்டு மாதங்களாக, பறவை காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த டில்லி தேசிய உயிரியல் பூங்கா, பொதுமக்கள் பார்வைக்கு மீண்டும் திறக்கப்பட்டது. பூங்காவில் உள்ள குளத்தில் இரண்டு பெலிக்கன் பறவைகள் மீன்களை வேட்டையாடி பசி தீர்த்துக்கொண்டன.

09-11-2025 | 07:09


கிறிஸ்மஸ் பண்டிகையொட்டி சென்னை எழும்பூர் போர்டெல் ஹோட்டலில் 100 கிலோ எடையுள்ள பிளம் கேக் கலவை தயாரிக்கும் பணி துவங்கியது. இதில் வைகை ஹோட்டல் குழுமம் இயக்குனர் சித்தார்த்.தினமலர் முதன்மை மக்கள் தொடர்பு அதிகாரி கல்பலதா.

08-11-2025 | 18:05