உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

சென்னை, சேத்துப்பட்டு, தனியார் ஹோட்டலில் , ஆர்யா வைஸ்யாஸ் சார்பில், அயோத்தியா ராமர் கோவிலில் தொடர்ந்து அன்னதானம் பணியில் ஈடுபட்ட, ஆர்யா வைஸ்யாஸ் அறக்கட்டளை நிறுவன தலைவர் ரவிகுமார் மற்றும் அதற்கு உதவியாக இருந்த கார்த்திக் டிபன் சென்டர் ரவிசந்திரன் ஆகியோரை, ஜி.ஆர்.டி தலைவர் ராஜேந்திரன், எஸ்.கே.ஷெட்டி கட்டுமான நிறுவன மேலாண்மை இயக்குனர் கே.வி. ரமணா ஷெட்டி ஆகியோர் பாராட்டி கவுரவித்தனர். அருகில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஜெகதீஷ் உள்ளார்.

17-03-2024 | 16:45


மேலும் இன்றைய போட்டோ

கோவை விமான நிலையம் பின்புறம் கல்லூரி மாணவி பாலியல் பலாத்காரத்தை கண்டித்து, செஞ்சிலுவை சங்கம் அருகே பா.ஜ., கட்சி சார்பில் தீ பந்தம் ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

03-11-2025 | 18:45


கார்த்திகை மாத ஜோதிக்காக தயாரிக்கப்பட்ட விளக்குகளை வரிசையாக வைக்கும் தொழிலாளர்கள்.இடம். உடுமலை

03-11-2025 | 13:37


திருநெல்வேலி மாவட்டம் காருகுறிச்சியில் விற்பனைக்காக தயாராகும் மண் சிலைகள்..

03-11-2025 | 13:10


பீஹார் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பெகுசராய் மாவட்டத்தில் உள்ள குளத்தில் மீன் பிடித்த பின் ராகுல், மீனவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

03-11-2025 | 13:09


அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில் உள்ள வயல்களில் விளைந்து காணப்படும் நெல்மணிகள். இடம்: கல்லாபுரம், உடுமலை.

03-11-2025 | 10:25


கேரள மாநிலம் அதிரப்பள்ளி அருவியில் குளிக்க குவிந்துள்ள சுற்றுலாபயணியர்.

03-11-2025 | 10:22


நீலகிரி மாவட்டம் குன்னூர் மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அவ்வப்போது மலைகளை தழுவிச் செல்லும் மேகக்கூட்டம் சுற்றுலா பயணிகளை வசீகரிக்கிறது.

03-11-2025 | 10:16


மேம்பாலத்தில் சீரமைப்பு பணிகள் காரணமாக, போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் வெறிச்சோடிய சாலையில், பட்டம் விட்டு விளையாடிய சிறுவர்கள். இடம்: கொல்கட்டா.

03-11-2025 | 08:26


கிறிஸ்துவர்கள் தங்கள் முன்னோரை நினைவு கூரும் வகையிலான கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், தங்கள் முன்னோர் மற்றும் உறவினர்களின் கல்லறையில் மலர் தூவி அஞ்சலி செலுத்திய கிறிஸ்துவர்கள்.

03-11-2025 | 08:21