இன்றைய போட்டோ
மேலும் இன்றைய போட்டோ
சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெற்கு சித்திரை வீதியில் பந்தல் அமைக்கும் பணி நடக்கிறது.
25-03-2026 | 16:31
மஹாராஷ்டிராவின் நவி மும்பையில் உள்ள சான்டா பகுதியில், காலி சமையல் காஸ் சிலிண்டர்களை தோளில் சுமந்தபடி, வினியோக நிலையங்களை நோக்கி படையெடுத்த மக்கள்.
25-03-2026 | 06:59
பிரசார மேடையில் தலைவர்கள் கர்ஜிப்பதற்கு முன்பே, தொண்டர்கள் தங்கள் முகத்தில் தலைவர்களை சுமக்க துவங்கிவிட்டனர். மாஸ்க்கை கழற்றினால் நான்...மாட்டிக்கொண்டால் என் தலைவர்! என்ற ரேஞ்சுக்கு கலக்கி வருகின்றன இந்த லீடர் மாஸ்க்குகள். இடம்: பிராட்வே, சென்னை.
25-03-2026 | 06:50
திருவொற்றியூர் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே உள்ள குட்டையில் கூட்டம், கூட்டமாக இரை தேடும் கொக்கு, மஞ்சள் மூக்கு நாரை உள்ளிட்ட பறவைகள்.
25-03-2026 | 06:41
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பெருவிழாவில் இரண்டாம் நாளில், வெள்ளி சூரிய பிரபையில் வீதி உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்த கபாலீஸ்வரர்- கற்பகாம்பாள்.
25-03-2026 | 06:38
மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயம் மற்றும் குடிநீர் ஆதாரமாக விளங்கும் வைகை அணை கோடை வெயில் சுட்டெரிக்க துவங்கியுள்ளதால் நீர்வரத்து இன்றி வறண்டுள்ளது. இடம்: ஆண்டிப்பட்டி, தேனி.
25-03-2026 | 06:33