உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கடலூரில் இருந்து சென்னை நோக்கி புதுச்சேரி வழியாக வந்த கண்டெய்னர் லாரியை நோனாங்குப்பம் பாலம் அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனையிட்டனர். லாரியின் பின்பக்க கதவு சீல் வைக்கப்பட்டு இருந்ததால், அதை கடைசி வரை திறக்காமல் ஆவணங்களை மட்டுமே பரிசோதனை செய்து லாரியை அனுப்பி வைத்தனர்.

29-03-2024 | 18:25


மேலும் இன்றைய போட்டோ

கடலூர் மாவட்டம் வடலூர் வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்பட்டது.

01-02-2026 | 06:53


தினமலர் கார்னிவல் அப்பார்ட்மென்ட் கொண்டாட்டம் நிகழ்ச்சி, சென்னை திருவேற்காடு ஆர்.எம்.கே., சோழா குடியிருப்பில் நடந்தது. இதில் நடந்த கோலப்போட்டியில் பங்கேற்ற குடியிருப்புவாசிகள்.

01-02-2026 | 06:50


டில்லி ஜனாதிபதி மாளிகையில் உள்ள புகழ்பெற்ற அமிர்த உத்யானம் எனப்படும் மலர்த்தோட்டம் பொதுமக்களின் பார்வைக்காக வரும் 3ம் தேதி முதல் மார்ச் 31ம் தேதி வரை திறக்கப்படுகிறது. தோட்டத்தில் பூத்து குலுங்கிய வண்ண மலர்கள்.

01-02-2026 | 06:41


ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் 2019, பிப்.,14ல் நடந்த பயங்கரவாத தாக்குதலில், 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். அந்த வடுக்களில் இருந்து மெல்ல மீண்டும் புதுப்பொலிவை புல்வாமா பெற்றுள்ளது.

01-02-2026 | 06:37


தைப்பூச விழாவை முன்னிட்டு, பழனி பெரியநாயகியம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது. மணக்கோலத்தில் வள்ளி, தெய்வானையுடன் முத்துக்குமாரசுவாமி.

01-02-2026 | 06:32


மெட்ராஸ் கெனைன் கிளப் சார்பில் சென்னையில் நடந்த நாய் கண்காட்சியில் பங்கேற்று அசத்திய விதவிதமான நாய்கள். இடம்: செயின்ட் பீட்ஸ் பள்ளி மைதானம், மயிலாப்பூர்.

01-02-2026 | 06:26


மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெப்பத் திருவிழா இன்று நடக்க உள்ளதை முன்னிட்டு, வெள்ளி அவுதா தொட்டிலில் அம்மன்.

01-02-2026 | 06:22


தைப்பூசத்தை முன்னிட்டு மாங்காடு காமாட்சி அம்மன் கோவிலில் நடந்த தெப்ப திருவிழாவில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளிய காமாட்சி அம்மன்.

01-02-2026 | 06:17


கடலூர் மாவட்டம் வடலூர் அருட்பிரகாச வள்ளலார் ராமலிங்க அடிகளார் நிறுவிய சத்திய ஞான சபையில், சுத்த சன்மார்க்க கொடியேற்றத்துடன் தைப்பூச ஜோதி தரிசன பெருவிழா தொடங்கியது.

31-01-2026 | 11:57