உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் உடல்நலம் குறைவால் இறந்த விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ. புகழேந்தி உடல் அஞ்சலிக்கு வைக்கப்பட்டுள்ளது. இங்கு வந்த முதல்வர் ஸ்டாலின் புகழேந்தி உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அருகில் அமைச்சர்கள் பொன்முடி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கவுதம் சிகாமணி எம்.பி.

06-04-2024 | 22:13


மேலும் இன்றைய போட்டோ

காய வைக்கப்பட்டுள்ள தானியங்களை உண்பதற்காக படையெடுத்து வரும் புறாக்கள் கூட்டம் காண்பதற்கு ரம்யமாக உள்ளது. இடம்: உடுமலை.

10-11-2025 | 07:50


ஊட்டியில் கடந்த இரு நாட்களில் திரண்ட சுற்றுலா பயணிகளால், படகு இல்ல சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

10-11-2025 | 07:50


கோவை சிங்காநல்லூர்- வெள்ளலூர் பகுதியில் பூத்த பிரம்ம கமலம் பூ.

10-11-2025 | 07:50


கோவை ரேஸ்கோர்ஸ் மீடியா டவர் அருகே, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் குறித்த விழிப்புணர்வு நடனம் நடந்தது.

10-11-2025 | 07:49


நீலகிரி மாவட்டம் கூடலூர் புளியம்பாறை பகுதியில் நடந்த அறுவடை திருவிழாவை முன்னிட்டு, நெற்கதிர் அறுவடையில் ஈடுபட்ட பழங்குடியினர்.

10-11-2025 | 07:41


கண்கவர் கலை வடிவமான பாரம்பரிய தெய்யம் விழா, கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பய்யனூரில் நடந்தது. இடம்: காரமேல் பாடியில் கோட்டம் ஆழிகோட்டு குருநாதன் தேவஸ்தானம்.

10-11-2025 | 07:38


உத்தர பிரதேசத்தின் வாரணாசியில உள்ள கங்கை ஆற்றில், ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்ட என்.எஸ்.ஜி., எனப்படும் தேசிய பாதுகாப்பு படையினர்.

10-11-2025 | 07:35


பாஜ மூத்த தலைவர் அத்வானி, தன் 98வது பிறந்த நாளை கொண்டாடினார். டில்லியில் உள்ள அவரது இல்லத்தில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

10-11-2025 | 07:29


உத்தராகண்ட் மாநிலம், சாமோலி மாவட்டத்தில் பத்ரிநாத் அருகே உள்ளது மானா கிராமம். நம் நாட்டின் முதல் கிராமமாக இது அறியப்படுகிறது. கடல் மட்டத்தில் இருந்து 10,499 அடி உயரத்தில் உள்ள இக்கிராமத்தில் அமைந்த முதல் டீக்கடையில், பத்ரிநாத் வரும் பக்தர்கள் தேநீர் அருந்தி செல்கின்றனர்.

10-11-2025 | 07:26