இன்றைய போட்டோ
கி.வா.ஜ குடும்பத்தினர் மற்றும் கலைமகள் இலக்கிய மாத இதழ் இணைந்து நடத்திய வாகீசகலாநிதி கி.வா.ஜ சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது பரிசினை நீதிபதி சுவாமிநாதன் வழங்கினார் உடன் இடமிருந்து பரிசுபெற்ற எழுத்தாளர் பாளை இசக்கி ராஜன்,நாவலாசிரியர் தேவி பாலா, பரிசு பெற்ற எழுத்தாளர் ஜவஹர், கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன், பரிசுபெற்ற எழுத்தாளர் பன்னீர்செல்வம் மற்றும் கி.வா.ஜ அவர்களின் புதல்வர் குமார்.இடம் : மயிலாப்பூர்.
07-04-2024 | 20:02
மேலும் இன்றைய போட்டோ
திருவண்ணாமலையில் உணவு பாதுகாப்புத்துறை சார்பில் தேரடி வீதியில் உள்ள பழக் கடையில், அதிகாரிகள் நடத்திய சோதனையில், கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட 500 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
21-05-2026 | 15:59
கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், பள்ளி கல்வித்துறை சார்பில் இலவச பாடப்புத்தகங்களை பள்ளிகளுக்கு அனுப்பும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
21-05-2026 | 15:58
கோவை கொடிசியா வளாகத்தில் நடந்த குளோபல் சோலார் எக்ஸ்போவில் இடம்பெற்று இருந்த அதிநவீன பேட்டரி வகைகள்.
21-05-2026 | 15:31
சிவகங்கை மாவட்டம் காளையார் கோயில் சோமேஸ்வரர் சவுந்தர நாயகியம்மன் கோயில் வைகாசி விசாக பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
21-05-2026 | 15:31
உடுமலை பார்க் ரோடு நகராட்சி பூங்காவில் உள்ள புல்தரைக்கு தண்ணீர் அடிக்கும் ஊழியர்.
21-05-2026 | 10:55
திருவள்ளூர் பெரிய குப்பம் பஸ் நிலையத்தில் உள்ள 2015 அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த அம்மா உணவகம் திமுக ஆட்சியில் கண்டு கொள்ளாததால் பாழடைந்து காணப்படுகிறது
21-05-2026 | 10:54