இன்றைய போட்டோ
மரம் வாடினாலும் மனம் வாடலாமா? உலகப் புகழ் பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசையாக வந்த வெளிநாட்டு பறவைகள் இனப்பெருக்கத்திற்கு பின் தங்களது குஞ்சுகளுடன் தத்தம் தாயகத்திற்கு சென்று கொண்டிருக்கின்றன, கடைசியாக வந்த செங்கால் நாரை பறவை இனங்களும் திரும்பச் செல்வதற்கு தயாராகிக் கொண்டிருக்கிறது.
12-05-2024 | 17:53
மேலும் இன்றைய போட்டோ
பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
05-10-2025 | 07:02
ஹிமாச்சல பிரதேசத்தில் நடந்து வரும் சர்வதேச தசரா விழாவில் அம்மாநிலத்தின் நாட்டி என்ற பாரம்பரிய நடனமாடி அசத்திய நடன கலைஞர்கள். இடம்: குலு.
05-10-2025 | 07:02
ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் உள்ள உலக பிரசித்தி பெற்ற தால் ஏரியை தூய்மைப்படுத்தும் நோக்கில், நீர்நிலைகளை ஆக்கிரமித்துள்ள களைகளை அகற்றும் பணியில் ஈடுபட்ட படகோட்டிகள்.
05-10-2025 | 07:02
கடலூர் பண்ருட்டி அடுத்த திராசு கிராமத்தில் விவசாயிகள் பயிர் செய்யப்பட்ட மஞ்சள் சாமந்தி பூ பூத்து குலுங்கியது.
05-10-2025 | 06:15
விழுப்புரம் வைகுண்டவாச பெருமாள் கோவிலில் உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி வைகுண்டவாச பெருமாள் சீனிவாச அலங்காரத்தில் சகஸ்ரதீப ஊஞ்சல் சேவையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
05-10-2025 | 05:31
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பலத்த காற்றுடன் பெய்த மழையினால் அறுவடை தருணத்தில் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.
04-10-2025 | 22:21