உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

தர்பூசணியை ருசி பார்க்கும் குரங்கார், இடம்: ஜம்மு காஷ்மீர்

20-05-2024 | 11:59


மேலும் இன்றைய போட்டோ

வால்பாறையில் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் தென்மேற்கு பருவமழைக்கு பின் தேயிலை செடிகள் துளிர்விட்டு பசுமையாக ஜொலிக்கிறது. இடம்: பழைய வால்பாறை.

30-09-2025 | 08:40


தொடர் விடுமுறையை முன்னிட்டு, பொள்ளாச்சி ஆழியாறு வந்த சுற்றுலா பயணியர் கவியிருவியில் குளித்து மகிழ்ந்தனர்.

30-09-2025 | 08:40


பந்தலூர் அருகே மழவன் சேரம்பாடி பகுதியில், கோடைக்காலத்தில் காட்டு தீயால் கருகிய சாமியார் மலை, தொடர் மழையின் காரணமாக பசுமைக்கு மாறி ரம்மியமாக காட்சி அளிக்கிறது.

30-09-2025 | 08:40


ராமாயணத்தில் ராவணனை ராமர் வெற்றி கொண்ட நாள் விஜயதசமி. அந்நாளில் ராவணன், அவரது சகோதரர் கும்பகர்ணன், மகன் மேக நாதன் ஆகியோரின் உருவ சிலைகள் பொதுவெளியில் எரிக்கப்படும். இது வட மாநிலங்களில் கொண்டாடப்படும் தசரா திருவிழாவின் முக்கிய நிகழ்வு. இதற்கான சிலைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்த கலைஞர். இடம்: போபால், மத்திய பிரதேசம்.

30-09-2025 | 08:26


கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆறுதல் தெரிவித்தார்.

30-09-2025 | 08:26


புதுச்சேரி எல்லப்பிள்ளை சாவடி ஸ்ரீ சிருங்கேரி சாரதாம்பாள் கோயிலில் 51 ஆம் ஆண்டு சாரதா நவராத்திரி விழாவை முன்னிட்டு மாணவியரின் முருகப்பெருமான் பரதநாட்டிய நிகழ்ச்சி நடந்தது.

30-09-2025 | 08:25


திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழாவின் எட்டாம் நாளான இன்று திருக்கல்யாண மண்டபத்தில் லிங்க பூஜை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பராசக்தி அம்மன்

29-09-2025 | 23:29


ஆயுத பூஜைய ஒட்டி கோவை பூ மார்க்கெட் பூக்கடைகளில் பூக்கள் வாங்க வந்த பெண்கள்.

29-09-2025 | 14:36


சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடைக்கு தயாராக உள்ள செண்டு மல்லி பூக்கள். இடம்: காரமடை

29-09-2025 | 14:14