உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

ஆனந்தமாய் நீந்தி விளையாடும் வாத்துகள். இடம்: கிருஷ்ணா குளம், பொள்ளாச்சி.

20-05-2024 | 18:32


மேலும் இன்றைய போட்டோ

நம் அண்டை நாடான நேபாளத்தில் சமீபத்தில் மாணவர் போராட்டத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அங்கு நடந்தது போலவே தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சிலும் அரசுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இடம்: மணிலா, பிலிப்பைன்ஸ்

22-09-2025 | 07:21


முதுமலை சாலையோர வனப்பகுதியில் மான்கள் அதிகளவில் உலா வரும் நிலையில், பிளாஸ்டிக் கழிவை உட்கொள்வதால் பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

22-09-2025 | 07:21


மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு துர்கா சிலையை அங்குள்ள பந்தலில் வைக்க எடுத்துச்சென்ற தொழிலாளர்கள். இடம்: கோல்கட்டா

22-09-2025 | 06:57


மூத்த குடிமக்களை ஆன்மிக தலங்களுக்கு பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மூலம் மத்திய அரசு அழைத்து செல்கிறது. ராஜஸ்தானின் பிகானீர் ரயில் நிலையத்தில் இருந்து தமிழகத்தின் ராமேஸ்வரத்திற்கு புறப்பட்ட ரயிலில் பயணிக்க வந்த மூதாட்டி ரயில் பெட்டியில் இருந்த மோடியின் படத்தை நெகிழ்ச்சியுடன் வணங்கினார்.

22-09-2025 | 06:57


இளம் வீரர்- வீராங்கனையர் 12 பேர், 21 நிமிடங்கள், 21 விநாடிகளில் 5,292 அம்புகள் எய்து சாதனை படைத்தனர். இடம்: மதுரவாயல்.

22-09-2025 | 06:57


மஹாளய அமாவாசையையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கங்கை நதிக்கரையில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்கம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிப்பட்டனர்.

22-09-2025 | 06:57


கோவை ஈஷா யோகா மையத்தில் நடந்த கிராமோத்சவத்தில், ஆண்கள் வாலிபால் இறுதிப் போட்டியில் பெங்களூரைச் சேர்ந்த ஹெக்கனஹள்ளி அணியை, சேலத்தைச் சேர்ந்த உத்தமசோழபுரம் அணி வீழ்த்தியது.

22-09-2025 | 06:38


பருவமழை துவங்க உள்ள நிலையில் நீரோட்டத்தை பாதிக்கும் வகையில் கட்டட கழிவுகள் அதிகளவில் கொட்டப்பட்டு நடந்து வரும் துறைமுகம் - மதுரவாயல் பறக்கும் சாலை மேம்பால பணி. இடம்: சிந்தாதரிபேட்டை

21-09-2025 | 16:07


வெறிச்சோடியது...!விடுமுறை தினம் என்றாலே சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகம் பரபரப்பாக காணப்படும் மகாளய அமாவாசை முன்னிட்டு அசைவ பிரியர்கள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

21-09-2025 | 12:51