உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வைகாசி மாத வளர்பிறை மஹாப்பிரதோஷத்தை முன்னிட்டு, தங்க ரிஷப வாகனத்தில் உண்ணாமுலை அம்மன் சமேதராய் அண்ணாமலையார் மூன்றாம் பிரகராத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.

20-05-2024 | 19:47


மேலும் இன்றைய போட்டோ

தேனி அல்லிநகரம் நகராட்சி 29வது வார்டில் தேர்தல் புறக்கணிப்பு பேனர் வைத்துள்ளனர்.

16-03-2026 | 16:01


சட்ட சபை தேர்தலை முன்னிட்டு திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இல்லாததால் மனுக்கள் பெறும் பெட்டி வைக்கப்பட்டுள்ளது.

16-03-2026 | 16:01


சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க., தலைவர் ஸ்டாலின் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

16-03-2026 | 16:01


தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ள நிலையில் சென்னை நகரில் உள்ள அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை மாநகராட்சி ஊழியர்கள் அழிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடம். எழும்பூர்

16-03-2026 | 16:01


சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.. இடம்: பழைய பேருந்து நிலையம், திருநெல்வேலி..

16-03-2026 | 15:56


திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னகளக்காட்டூர் அரசு துவக்கப் பள்ளி வளாகத்தின் சுற்றுச்சுவருக்கு கேட் வசதி ஏற்படுத்தாமல் இருந்தது. இதனால் பள்ளி வளாகத்தை குட மகன்கள் இரவு நேரத்தில் மதுக்கூடமாக பயன்படுத்தி வந்தனர். இது குறித்து நம் நாளிதழில் வெளியான செய்தியின் எதிரொலியால் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அரசு துவக்கப் பள்ளிக்கு கேட் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

16-03-2026 | 12:21


மேற்காசிய நாடான லெபனானின் தஹியோவில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலால் உருக்குலைந்த கட்டடம்.

16-03-2026 | 12:21


எரிபொருள் தட்டுப்பாடு அச்சத்தால், கடலுக்கு செல்லாமல் மீன்படி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகள். இடம்: மங்களூரு, கர்நாடகா.

16-03-2026 | 12:20


உத்தரபிரதேசத்தில் போலீஸ் கான்ஸ்டபிள் தேர்வில் பங்கேற்க வந்த தேர்வர்கள் வாரணாசி ரயில் நிலையத்திற்கு வெளியே படுத்து உறங்கினர்.

16-03-2026 | 12:20