உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையம் சார்பில் புகைப்பிடிப்பதை கைவிடுவதற்கான வழிகாட்டுதல் அடங்கிய டிஜிட்டல் ஆடியோ கலந்துரையாடல் ஆலோசனை தொகுப்பு அறிமுகம் செய்த தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி, எஸ்.என்.ஆர்., சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக இயக்குனர் சுந்தர், மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன்,புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்திகேஷ்.

31-05-2024 | 12:46


மேலும் இன்றைய போட்டோ

மேற்கு வங்கத்தில் லட்சுமி பூஜை இன்று கொண்டாடப்படுகிறது. இதற்காக களிமண்ணால் செய்யப்பட்ட லட்சுமி சிலையை வாங்கி சென்ற இளம்பெண். இடம்: நாடியா, மேற்குவங்கம்.

06-10-2025 | 08:40


காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆத்தூர் ஊராட்சியில், மழை நீர் வடிகால்வாயில் செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்ல முடியாத நிலை இருந்தது. நம் நாளிதழ் செய்தி எதிரொலியாக வடிகால்வாய் சீரமைக்கப்பட்டு உள்ளது.

06-10-2025 | 08:39


தொடர் விடுமுறைக்கு சொந்த ஊர் சென்றவர்கள் சென்னைக்கு திரும்பிய நிலையில் குரோம் பேட்டை ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

06-10-2025 | 08:39


கிளாம்பாக்கம் ரயில் நிலைய பணிகளுக்கு எனக் கூறி, அதிக பரப்பு மற்றும் ஆழத்தில் மண் எடுக்கப்பட்டடுள்ளதால் பிரம்மாண்ட பள்ளங்கள் ஏற்பட்டுள்ள காஞ்சிபுரம் உள்ளாவூர் சிற்றேரி.

06-10-2025 | 08:39


சென்னை பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதியை ஒட்டியுள்ள பகுதியில் இரை தேடி வரிசையாக அமர்ந்திருக்கும் நீர் காகங்கள்.இடம் : சோழிங்கநல்லூர்.

06-10-2025 | 06:02


தொடர்ந்து பெய்த மழையோடு, நிலத்தடி நீரும் கைகொடுக்க பச்சைக்கம்பளம் விரித்தாற் போன்று பரந்து காணப்படும் நெல் வயல்கள். இடம்: மதுரை அருகே அய்யர் புதூர்.

05-10-2025 | 19:44


ஸ்தம்பித்தது காந்திபுரம்:தீபாவளியை முன்னிட்டு ஷாப்பிங் செய்ய கூடிய மக்கள் வெள்ளத்தால் கோவை காந்திபுரம் ஸ்தம்பித்தது.

05-10-2025 | 18:22


சாரல் மழை பெய்தாலும் ஆதவனின் ஒளி மேககூட்டங்களிடயே அழகு தான்.இடம்: காரமடை அருகே மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரம், கணுவாபாளையம் .

05-10-2025 | 16:20


பி.ஆர்.ஓ., எனப்படும் எல்லை சாலை அமைப்பு சார்பில், லடாக்கின் மிக் லா பாஸ் பகுதியில் கடல் மட்டத்தில் இருந்து 19,400 அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள, உலகின் உயரமான சாலையில், கட்டுமான பணியாளர்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

05-10-2025 | 07:02