உள்ளூர் செய்திகள்

இன்றைய போட்டோ

கோவை காந்திபுரம் அலன் இன்ஸ்டிட்யூட்டில் பயின்று நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை கௌரவிக்கும் விழாவில் ஆலன் கோவை மற்றும் புதுச்சேரி தலைவர் சவுரப் திவாரி மற்றும் கோவை வளாகத் தலைவர் வைபவ் திவாரி மாணவர்களை கௌரவித்தனர்.

10-06-2024 | 01:28


மேலும் இன்றைய போட்டோ

தமிழக அரசு சார்பில், டில்லி ரபி மார்க் கான்ஸ்டிடியூஷனல் கிளப்பில் நடத்தப்படும் தமிழக கைவினைப் பொருட்கள் கண்காட்சியை டில்லி தமிழ்நாடு இல்ல உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். உடன், தமிழ்நாடு இல்ல அதிகாரிகள்.

14-10-2026 | 18:16


மதுரை பெத்தானியாபுரம் அண்ணா மெயின் வீதியில் கற்கள் பெயர்ந்து பல மாதங்களாகியும் சீரமைக்கப்படாததால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகின்றனர்.

14-10-2026 | 18:06


சென்னையில் பல்வேறு இடங்களில் பரவலான மழை பெய்தது திடீரென பெய்த மழையால் மக்கள் நனைந்து கொண்டே பயணங்களை மேற்கொண்டனர் இடம் வண்டலூர் மீஞ்சூர் வெளிவட்ட சாலை குன்றத்தூர்

14-10-2026 | 18:02


கோவை பூ மார்க்கெட்டில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள சாமந்தி பூ.

14-10-2026 | 18:01


சோலார் பேனல் நடுவே மரம் வளர்க்கும் ஊராட்சி காங்கயம் அடுத்த, படியூர் ஊராட்சி சார்பில், சம்பந்தம்பாளையம்–படியூர் சாலையில் பொங்கலுார் மீனாட்சி வலசு அருகே ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு, சூரியசக்தி மின்தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. மின்தகடுகள் மேலே, மரம் வளர்ந்து வருவதால், அவை சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மின்தகடுகளை முறையாகப் பராமரிக்காமல் ஊராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டுகிறது.

14-10-2026 | 17:54


வல்லக்கோட்டை முருகன் கோவிலில், நவராத்திரி விழாவின் நான்காம் நாளான நேற்று, தேவி கருமாரி திரிபுர சுந்தரி அம்மன், ஸ்ரீஸ்காந்தமாதா அங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

14-10-2026 | 17:44


ராமநாதபுரம் டி பிளாக், பாரதிநகர் 14 வது தெருவில் மழைநீர் தேங்கி காணப்பட்டது.

14-10-2026 | 17:06


பருவமழை துவங்கியது: வடகிழக்கு பருவமழையொட்டி கடற்கரையில் சூழ்ந்த கருமேகக் கூட்டம். இடம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி

14-10-2026 | 16:46


பல்லாவரம் - குன்றத்தூர் சாலையில் குண்டும் குழியுமாக கிடக்கும் சாலையில் மழைநீர் குளம் போல் தேங்கி உள்ளதால் பள்ளத்தில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகள் இடம்: அனகாபுத்தூர்

14-10-2026 | 16:22